எலுமிச்சை சாற்றினை அரை டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்லை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, முகத்தில் உள்ள கருமை படிப்படியாக முற்றிலும் அகலும்.
முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிரை சேர்த்து நன்கு அடித்து, அவற்றை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முகத்தில் இருக்கும் கருமை நீங்கும்.
வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடியோ அல்லது வாரம் 3 முதல் 4 முறையோ செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.
பின் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி துடைக்க வேண்டும். கலந்து வைத்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். 15 நிமிடத்திற்கு பிறகு மிதமான குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேஸ் மாஸ்க் வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கருமைகள் நீங்கும்.