முகத்தில் எண்ணெய் வழிவதை சரிசெய்ய உதவும் ஃபேஸ்பேக்குகள் !!

Webdunia
முகத்தில் எண்ணெய் வழிந்தால் நம்மால் மிகச் சிறிய அளவிலான மேக்கப் போடுவதும் கடினமான காரியமாகிவிடும். இப்போது எண்ணெய் வழிவதைச் சரிசெய்யும்  ஃபேஸ்பேக்கினை முட்டையினைக் கொண்டு தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: முட்டை - 1, அரிசி மாவு - 2 ஸ்பூன், கற்றாழை - 1 துண்டு.
 
செய்முறை: கற்றாழையின் இருபுறமும் வெட்டி, அதில் உள்ள முட்களை நீக்கிவிடவும். அடுத்து கற்றாழையின் சதைப் பகுதியினை வெட்டி, மிக்சியில் போட்டு அத்துடன் முட்டையினை உடைத்து ஊற்றி நுரை பொங்க அடித்துக் கொள்ளவும். அடுத்து இந்தக் கலவையில் அரிசி மாவினைச் சேர்த்தால் முட்டை ஃபேஸ்பேக்  ரெடி.
 
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்தால் முகத்தில் எண்ணெய் வழிவது சரியாகிவிடும்.
 
குறிப்பு 2: ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பாதாம் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு  மென்மையாக அடித்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி நீங்குவதுடன்,  சருமமும் பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
 
குறிப்பு 3: அரிசி மாவில் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் உட்பொருட்கள் உள்ளன. இவை சருமத்தை பிரகாசமாகவும், பொலிவோடும்,  மென்மையாக்கவும்  செய்யும். பால் சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, வறட்சியடையாமல் தடுக்க உதவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்