தாய்ப்பால் அதிகம் சுரக்க தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும்?

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (19:05 IST)
குழந்தை பிறந்தவுடன் தாய் பால் கொடுப்பது மிகவும் அவசியம் என்பதும் தாய்ப்பாலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான் அந்த குழந்தைக்கு கடைசிவரை காப்பாற்றும் என்பதும் மருத்துவர்கள் அறிவுரையாக இருந்து வருகிறது. ஒரு சிலர் ஓரிரு மாதங்கள் மட்டும் தாய்ப்பால் கொடுத்துவிட்டு அதன் பிறகு புட்டி பால் கொடுத்து வருவது தான் இன்றைய நோய் அதிகரிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. 
 
குறைந்தது இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதே நமது முன்னோர்களின் அறிவுரையாக இருந்தது. இந்த நிலையில் பிரசவத்துக்கு பின்னர் தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். 
முருங்கைக்கீரை அதிகம் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் என்றும் அதேபோல் காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை தினமும் தாய்மார்கள் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 
 
இனிப்பு வகைகளை குறைத்து அதற்கு பதிலாக பாதாம் பால் மற்றும் மீன்கள் சாப்பிடுவது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது. இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து அதிக உள்ள உணவுகளை சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். 
 
மேலும் தினசரி குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என்றும் முட்டை பேரிச்சம்பழம் ஆகியவற்றை தாய்மார்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்