மாந்திரீகத்தில் எலுமிச்சை பழம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா?
செவ்வாய், 7 மார்ச் 2023 (23:10 IST)
பொதுவாகவே மாந்திரீகத்தில் எலுமிச்சை பழம் பயன்படுத்தப்படுகிறது. அதைப்பற்றி இதில், காண்போம்.
அதாவது, கண்திருஷ்டியைப் போக்கி குழந்தைகள் முதல் பெரியோர் வாய் எல்லோரையும் காக்க எலுமிச்சையுடன் மிளகாய் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
ஒருவருக்கு நோய், பிணி இருந்தால், அவர்கள் அருகில் இந்த எலுமிச்சை பழகத்தை தொங்கவிட்டால், அவர்களிடமுள்ள தீய சக்தியை விரட்டிவிடும் என்றும், அவகளின் நோயைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
எலுமிச்சை பழம், துர்க்கா பூஜையின்போது, விளக்குகள் பயன்படுத்த உதவுகிறது. இதற்கு அதன் தோல் பகுதி மென்மையாக இருக்க வேண்டும், அதன் சாற்றை வெளியேற்றி, பாதிச் சாற்றை வெளியேற்றியபின், திரியிட்டு விளக்கேற்றலாம்.
இந்த விளக்கின் உட்பகுதியை கடவுளுக்கு காட்டும்போது, மாயை, காம, பேராசை, ஆகியவை கடவுளுக்கு முன்பாக வெளியேறிவிடும் என்றும். இதில், மறைந்துள்ள பச்சை விதைகள் மாயையைக் குறிக்கும் எனக் கூறப்படுகிறறது.
அதேபோல், பேய்களை விரட்ட மாந்திரிகத்தில், சிவனின் வடிவமாகவே எலுமிச்சை பழம் கருதப்படுகிறது. மஞ்சலும், குங்குமமும் சக்தியின் வடிவமாகும். அதனால்தான் வெளியில் செல்லுபோது, எலுமிச்சையும் பையில் போட்டு விடுகிறார்கள்.
அதேபோல், வெளியில் கிளம்பும்போது, வாகனத்தைச் சுற்றி நான்கு திசையிலும் இதை வீசுவது தீய சக்தி அண்டக்கூடாது என்பதுதான் காரணம்.