அன்னாச்சி பழங்கள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (15:20 IST)
பொதுவாக பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்றாலும் ஒரு சில பழங்கள் கூடுதல் நன்மை அளிக்கும் என்பதும் அவற்றில் ஒன்று அன்னாச்சி பழம் என்றும் கூறப்படுகிறது. 
 
அன்னாச்சி பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் காயங்கள் இருந்தால் உடனே ஆறும். அதேபோல் அன்னாச்சி பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலிமையாக்கும். 
 
அன்னாச்சி பழத்தை வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் 5 நிமிடம் போட்டு அதன் பிறகு சாப்பிட்டால்  ருசி அதிகரிக்கும்.  அன்னாச்சி பழம் தொடர்ந்து சாப்பிட்டால் மூளை கோளாறு ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமாகும்.  
 
ஒற்றைத் தலைவலி அடிக்கடி வந்தால் அன்னாச்சி பழம் சாப்பிட்டால் சரியாகும். அண்ணாச்சி பழத்தை தேன் கலந்து சாப்பிட்டால் கூடுதல் நன்மை கிடைக்கும். 
பெண்களுக்கு வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம்.  அன்னாச்சி பழம் இதய நோய் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்