ரத்த தானம் குறித்த வதந்திகளுக்கு ஒரு விளக்கம்..!

செவ்வாய், 26 டிசம்பர் 2023 (18:30 IST)
உலகம் முழுவதும் ரத்த தானம் செய்வது ஊக்குவிக்கப்பட்டு வந்தாலும் இரத்ததானம் குறித்த சில வதந்திகள், தானம் செய்பவர்களை அதிர்ச்சி அடைய செய்கிறது. இந்த நிலையில் இது குறித்த வதந்திகள் குறித்தும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம். 
 
ரத்த தானம் செய்தால் நரம்புகளுக்கு வேதனையை ஏற்படுத்தும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கும் என்றும், ரத்த தானம் செய்பவருக்கு நோய் தொற்று ஏற்படும் என்றும்  பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது என்றும் பல வதந்திகள் பரவி வருகிறது. 
 
ஆனால் உண்மையில் ரத்த தானம் செய்வதால் நரம்புகளுக்கு எந்த விதமான வேதனையும் ஏற்படுத்தாது. ஊசியால் துளையிடப்பட்ட இடம் ஒரு சில மணி நேரங்களிலேயே இயல்பாகிவிடும். எனவே ரத்த தானம் செய்வதன் மூலம் நரம்புகளுக்கு வேதனை ஏற்படுத்தாது. 
 
அதேபோல்  ரத்த தானம் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கும் என்பதிலும் உண்மை இல்லை. ரத்ததானம் செய்த சில மணி நேரங்களில் இரத்த சிவப்பணுக்கள்  மீண்டும் உருவாகிவிடும் என்பதுதான் உண்மை. 
 
ரத்ததானம் செய்பவருக்கு நோய் தொற்று ஏற்படும் என்பதிலும் உண்மை இல்லை. கிருமி நீக்கப்பட்ட ஊசியை பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் வராது.  
 
பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது என்பதும் வதந்திதான். ஆண்களைப் போலவே பெண்களும் தாராளமாக ரத்த தானம் செய்யலாம். ஆனால் அதே நேரத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்