கோடைக்கு அசைவம் சிறந்ததா?

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (16:47 IST)
எப்போதும் பருவநிலைக்கு ஏற்ற உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால், நம்மில் யாருமே அதை பின்பற்றுவதில்லை. அந்த வகையில் கோடை காலத்தில் அசைவ உணவுகள் சிறந்ததா? என பார்ப்போம்...
 
அசைவ உணவுகளை கோடைகாலத்தில் தவிர்ப்பதே நல்லது. அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதயநோய் வருவதற்கான சூழலை ஏற்படுத்தும். 
 
அசைவம் என்றதும் நினைவுக்கு வருவது, பிராய்லர் கோழி. பிராய்லர் கோழிகளை கோடைகாலத்தில் மட்டுமல்ல எப்போதும் சாப்பிட கூடாது. நாட்டுக்கோழி சாப்பிடலாம். ஆனால், அதுவும் கோடை காலத்தின் போது தவிர்க்க வேண்டிய ஒன்றுதான். 
 
கோழிக்கறி உடலில் சூட்டை உண்டாக்கும் குணமுடையது. ஏனென்றால் வெயில் காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறால் மலச்சிக்கலும் வயிற்று உபாதைகளும் ஏற்படும். 
 
கோடையில், அசைவம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் மீன் குழம்புவைத்து சாப்பிடலாம். அதுவும் மசால குறைவாக. 
 
மிக முக்கியமான கோடை காலத்தில் மறந்தும்கூட சேர்க்க கூடாதது நண்டு. ஏனெனில் அது உடலில் எரிச்சலை ஏற்படுத்தும். அலர்ஜி உண்டாகவும் அதிக வாய்ப்புண்டு. 
 
இறாலையும் தவிர்க்க வேண்டும். நெத்திலி போன்ற மீன்களையும்,  முட்டையையும் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்