சாதாரணமாகவே வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும். அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
தயிர் உடலின் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தும். வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும். தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிர்ச்சிதான். இருந்தாலும் தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்குத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.