எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்சனையை சரிசெய்ய........

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (11:44 IST)
ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்னை உடைய பெண்களுக்கு, மெனோபாஸ் நேரத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால், மருத்துவரின், ஆலோசனைப்படி பால் எடுத்துக்கொள்வது நல்லது.

 
எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், தினமும் காலையில் சோயாப்பால் அருந்துவது நல்லது. இதில், கொழுப்பு மிகமிகக் குறைவு என்பதால் உடல் பருமனானவர்களும் சாப்பிடலாம். நெத்திலி, வஞ்சிரம், கட்லா உள்ளிட்ட மீன்களைச் சாப்பிடுவதன் மூலமாக எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. 
 
ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம். ஆட்டுக்கால் எலும்பு மஜ்ஜையில் கால்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. இதனைச் சாப்பிடுவதால் எலும்பு விரைவில் கூடும். 
 
நண்டில் கால்சியம் உள்ளது. எலும்புமுறிவு ஏற்பட்டவர்கள், மூன்று நாளுக்கு ஒரு முறை நண்டு சூப் குடிக்கலாம். அதிக உஷ்ணம் உள்ளதால் இதனை வெயில் காலங்களில் தவிர்ப்பது நல்லது. 
 
கொள்ளில், சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்தது. எலும்பு உறுதிக்குக் கொள்ளு மிகவும் அவசியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சைவம் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்துக் குடித்துவந்தால் எலும்பு வலுவாகும்.
 
அத்திப்பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது. இதுதவிர கேரட், வெண்டைக்காய், வெங்காயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
 
கீரைகளில் வெந்தயக் கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை ஆகியவற்றில் கால்சியம் உள்ளது. கீரைகளை அசைவத்தோடு சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இரவில் சாப்பிடக் கூடாது. இதனால், செரிமானம் தாமதப்படும். காலை, மதிய உணவில் கீரை சாப்பிடலாம். எலும்புகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி சத்து நிறைந்த ஆரஞ்சு, சோயா, பருப்பு வகைகளைச் சாப்பிடலாம். 
 
சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் தினமும் காலை 7:00 - 8:00 மணி வெயிலில் நிற்கலாம். இதனால், வைட்டமின் டி உற்பத்தியாகி எலும்புகளின் உறுதி அதிகரிக்கும்.
அடுத்த கட்டுரையில்