நமது உணவின் இரகசியம்: புறக்கணிக்கப்படும் கறிவேப்பிலையின் முக்கியத்துவம்

Mahendran

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (18:59 IST)
நாம் சமைக்கும் உணவில், மணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை, சாப்பிடும்போது ஒதுக்கிவிடுவது வழக்கம். ஆனால், நாம் ஒதுக்கும் இந்த கறிவேப்பிலையில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை.
 
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, மற்றும் கால்சியம் போன்ற பல அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் இதில் அடங்கி உள்ளன.
 
கறிவேப்பிலையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். கறிவேப்பிலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.  இது பசியின்மை, செரிமானக் கோளாறு, மற்றும் வயிற்று இரைச்சல் போன்ற பிரச்சினைகளை சரிசெய்கிறது.
 
நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை, மாலை என 10 கறிவேப்பிலைகளை மென்று சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.  கறிவேப்பிலை உடல் எடையைக் குறைத்து, உடலுக்கு வலிமை சேர்க்கிறது. கறிவேப்பிலையை அரைத்து, எலுமிச்சம்பழம் அளவில் எடுத்து, தயிரில் கலந்து வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
 
எனவே, இனிமேல் உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை ஒதுக்காமல், அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பெற அதை உண்போம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்