தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்? அசத்தல் தகவல்கள்..!

Mahendran

புதன், 20 ஆகஸ்ட் 2025 (18:08 IST)
மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு, ஒரு கிளாஸ் பால் குடிப்பது, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும். 
 
வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தை சீராக்கி, மலத்தை இலகுவாக்கும். அதேபோல், வெதுவெதுப்பான பால் மூலநோயால் ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும். எனினும், நார்ச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.
 
ஒருவேளை மலச்சிக்கலுடன் வயிற்றுவலியும் இருந்தால், கடுக்காய் தூளுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று வலி குறையும்.
 
மாமரத்தின் பட்டையை அரைத்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து குடித்து வர, ரத்த பேதி நிற்கும்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்