குழந்தைகளின் கண் கோளாறுக்கு செல்போன் தான் முக்கிய காரணம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (19:08 IST)
செல்போன் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டாலும் குழந்தைகளின் கையில் செல்போன் கொடுப்பதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
சமீபத்தில் குழந்தைகளின் கண் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் பெரும்பாலான குழந்தைகளின் கண் பாதிப்புக்கு செல்போன்தான் காரணம் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. 
 
குழந்தைகள் அதிக நேரம் செல்போன்களில் கேம் விளையாடுவது திரைப்படங்கள் பார்ப்பது ஆகியவை காரணமாக கண் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. 
 
குழந்தைகள் அதிக நேரம் செல்போன்களை பார்த்தால் பார்வை கோளாறு மங்கலான பார்வை போன்ற பிரச்சனைக்கு ஆளாகும் நேரிடும் என்றும் எனவே குழந்தைகளுக்கு செல்போன் பயன்பாட்டை குறைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செல்போன் தொடர்ச்சியாக பார்ப்பதால் கண் நரம்புகள் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்