அன்றாட வாழ்வில் நாம் காலையில் தூங்கி எழுந்தவுடன் நாம் முதலில் குடிப்பது தேநீர்தான். இந்த தேநீர் என்பது நமது வாழ்வுடன் இணைந்த ஒரு இனிப்பு பொருளாகவே மாறிவிட்டது.
நம் உடல் இயக்கத்துக்கு காரணமான மூளை சோர்வடையும்பொழுது நமக்கு முதல் விருப்பமாக இருப்பது தேநீர்தான். தேநீர் பருகுவது என்பது நமது மந்தமான உடலுக்கு நல்லவிதமான புத்துணர்ச்சியஅளித்தாலும், அதில் சில பக்கவிளைவுகளும் உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இளைஞர் முதல் பெரியோர் வரை தினமும் குறைந்தது 5 முறை கூட காபி ,தேனீர் குடிப்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி டீ குடிப்பது நமக்கு உற்சாகத்தை தந்தாலும் அதனை தவறான முறையில் பருகும்போதுதான் நமக்கு அது தீங்காக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
அப்படி தவறான வழிகளில் டீ குடிக்கும் போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.
அடுப்பில் வைத்து தேநீரை திரும்ப திரும்ப சூடுபடுத்தும் போது அது மிகவும் தீங்கு விளைவிக்கும் பாணமாக மாறக வாய்ப்புண்டு. மேலும் தேனீரின் உண்மையான சுவையை குறைந்து அதில் அமிலத்தன்மையும் கூடுகிறது.
தேவைப்படும் போது அந்தந்த சமயத்தில் தயார் செய்யப்படும் தேநீரை குடிப்பதே உடலுக்கு உகந்ததாக இருக்கும் .
ஒருவேளை காலியான வயிற்றில் டீ குடிக்கும் நிலை ஏற்ப்ட்டால் அதனுடன் பிஸ்கட் சேர்த்து எடுத்துக்கொண்டால் வயிற்றுக்கு நல்லது.ஆனல்காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் உடலில் அமிலத்தன்மையை அதிகரித்து நமக்கு பசியின்மையை ஏற்படுத்திவிடும்.
தொடர்ந்து காலியான வயிற்றிலேயே தேனீர் குடித்து வந்தால் அது நமது வளர்ச்சிதை மாற்றத்தில் பொல்லாத விளைவுகளை ஏற்படுத்தும். முதலில் பசியை குறைத்து பிறகு உடல் எடையை அதிகரிக்க செய்துவிடும்.
அடுப்பிலிருந்து இறக்கிய சூட்டுடன் அப்படியே தேனீர் குடிக்கக்கூடாது ஏனேனில் சூடான தேனீர் பருகினால் அது வாய், தொண்டை, உணவுக்குழாயை ஆகியவற்றை பாதிப்படைய செய்வதுடன் வயிற்றில் அல்சர் போன்ற வலி கலந்த எரிச்சலையும் உண்டாக்கிவிடும்.
ஆனால் அதிக அளவு டீத்தூள் கலந்து டீ குடிப்பதும் ஒருவிதத்தில் தலைவலியை உருவாக்கும்.அதன் மூலம் உடலில் நீர்சத்து குறைவு, , பதற்றம் போன்ற ஆரோக்கியக் குறைகளை ஏற்படுத்திவிடும்.