சாப்பிட்டு முடித்தவுடன் என்னென்ன செய்ய கூடாது?

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (05:47 IST)
ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத சாப்பாட்டை எந்த அளவுக்கு சரியான முறையில் தேர்வு செய்து சாப்பிடுகிறோமோ அதே அளவுக்கு சாப்பிடும் முன்பும், சாப்பிடும் பின்பும் என்ன செய்ய வேண்டும்?, என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதுகுறித்து தற்போது பார்ப்போமா!



 


சாப்பிட்டு முடித்த பின்னர் பலருக்கு இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் சிகரெட் பிடிப்பது. சாப்பிட்டவுடன் சிகரெட் பிடித்தால்தான் சாப்பிட்டதன் திருப்தியையே அவர்கள் உணர்வார்கள். ஆனால் பொதுவாகவே சிகரெட் புகைப்பதே தவறு என்று இருக்கும் நிலையில் சாப்பிட்டவுடன் சிகரெட் புகைப்பது என்பது ஒரே நேரத்தில் 10 சிகரெட் பிடிப்பதற்குச் சமம்.

எந்த காரணத்தை முன்னிட்டும் சாப்பிட்ட பின்னர் குளிக்க கூடாது. எப்போதுமே குளித்த பிறகுதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டவுடன் குளிப்பதால் கைகால்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து உடலுக்கு ஓய்வில்லாத தன்மையை கொடுக்கும்

அடுத்து சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிட கூடாது. சாப்பாட்டைவிட பழங்கள் எளிதில் ஜீரணம் அடையும் என்பதால் சாப்பிட்டவுடன் பழம் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படும்,. சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்போ, அல்லது சாப்பிட்ட அரை மணி நேரம் முன்போ பழங்கள் சாப்பிடலாம். இதனால் நெஞ்செரிச்சல், ஏப்பம் மற்றும் அஜீரணக் கோளாறுகளை போன்றவைகளை தவிர்க்கலாம்.

சாப்பிட்ட உடனே தூங்க செல்வது மிக மிக கெட்ட பழக்கம். குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்குமான இடைவெளி இருக்க வேண்டும். சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்வது செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்

வயிரு நிறைய சாப்பிட்டு முடித்ததும் சூடாக ஒரு கப் காபி அல்லது டீ குடிப்பது  மிகவும் தவறு. காபி, டீ, கோலா, கஃபைன் கலந்த பானங்களைக் குடிப்பதால் உணவின் மூலம் உடலுக்குள் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவது தடுக்கப்படும்.

உணவுக்குப் பிறகு ஐஸ்கீரிம் சாப்ப்பிடுவார்கள் சிலர். அது ரத்தச் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை அதிகரித்து உடல் பருமனுக்கு வழி வகுக்கும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டும்.
அடுத்த கட்டுரையில்