இரவில் தூக்கமில்லையா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (18:00 IST)
தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகும். குறைந்தது 7 மணி நேரம் ஒரு மனிதன் தூங்க வேண்டும் என மருத்துவ ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சில சமயம் நன்றாக இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுபவர்கள் சில உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொண்டால் தூக்கம் வரும். 
 
மாலையில் சூரியன் மறைந்த பிறகு காபி, டீ போன்ற பானங்களையும் எடுப்பதை தவிர்த்து விட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும். காபி, டீ ஆகியவை தூக்கத்தை கலைக்கும் தன்மையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே படுக்கைக்கு செல்வதற்கு ஆறு மணி நேரத்துக்கு முன்னர் காபி டீ குடிக்கக் கூடாது
 
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தூங்குவதற்கு முன்பு வயிறு நிறைய சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் தூக்கம் கெடும். குறிப்பாக கொழுப்புக்கள் நிறைந்த உணவை .சாப்பிட கூடாது. கொழுப்பு அதிகம் உள்ள உணவை சாப்பிட்டால் அஜீரணம் போன்ற சிக்கல் காரணமாக இரவில் நிம்மதியாக தூங்க விடாமல் செய்துவிடும்
 
இரவில் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். அதேபோல் பெரும்பாலும் இறைச்சியை இரவில் தவிர்ப்பது நல்லது. தூங்குவதற்கு முன் காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது. இதனால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவதோடு இரவில் தூக்கம் சரியாக வராது 
 
நள்ளிரவில் திடீரென எழுந்து சாப்பிடுவதும் தூக்கத்திற்கு மிகப்பெரிய எதிரியாக கருதப்படுகிறது. நள்ளிரவில் பர்கர் பீட்சா ஐஸ்கிரீம் ஆகியவையும் சாப்பிடவே கூடாது 
 
நள்ளிரவில் திடீரென பசி எடுத்தால் பாலுடன் சிறிதளவு தேன் கலந்து மட்டும் சாப்பிடலாம். மேலும் நல்ல தூக்கத்திற்கு படுக்கை அறையை தூய்மையாக இருக்க வேண்டுமென்பதும் படுக்கை அறையில் உள்ள பொருட்கள் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்