சுவர் இருந்தால்தானே சித்திரம் ? சினோஜ் கட்டுரைகள்

வெள்ளி, 4 நவம்பர் 2022 (23:15 IST)
இன்றைய அசவரயுகத்தில் அகில உலகம் மட்டுமின்றி அத்தனை அண்டசராசரங்களையும் கட்டி ஆள நினைத்து, அதில், முக்கால் வாசியை அடைந்துவிட்டான் விஞ்ஞான மனிதன். இந்த பூமிக்கு  நாம் வந்து பிறந்ததன் பயனாக நாமும் இதற்கு நிறைய திருபிக் கொடுக்க வேண்டிய கடமையும் நமக்குண்டு.

ஒரு அறியல் அறிஞரின் கண்டுபிடிப்பு,ஒரு தொழில் நுட்ப வல்லுனரின் சாதனை, ஒரு கவிஞரின் படைப்பு, ஒரு எழுத்தாளரின் காவியம் எல்லாம் அவரை மட்டுமே சார்ந்ததாக இருக்குமானால், அதனால் இவ்வுலகிற்கு என்ன பயன்?

ஆனால், எடிசனைப் போன்றவர்களின் அயராத உழைப்பிலிருந்து கிடைத்துள்ள  அரும்பெறும் சாதனைக் கண்டுப்புகள் எல்லாம் ஒட்டுமொத்த மானுடத்தின் பிரதிபலிப்பையே இன்னும் ஒருபடி மேலே  உயர்த்திக்காட்டியது.

அவரைப் போன்றே இன்னும் எத்தனையோ மேதைகளின் பங்களிப்புகளிலும் தூக்கத்தைத் துறந்த இரவுகளின் விளைந்த அரிய சாதனங்களினாலும் இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகம் நமக்குச் சாதகமாகி, நாமும், அதன் பயன்பாட்டினை சொகுசாகவே அனுபவித்து வருகிறோம்.

இப்படி, எதிலாவதும் நாம் சாதிக்கத் தேவையானது நமது சிந்தனையும், தொடர்முயற்சியும், இடையயராத ஆர்வமும்தான் என்றாலும், நம்மை ஒட்டுமொத்தாக இயக்குவதற்குத் தேவை நம் உடலுக்குத் தேவையான போஷாக்குதான்.

மூளையின் ஆற்றலைப் புதுப்பிக்க தொடர்ந்து வேலை செய்வதும், படிப்பதும், புத்தாக்கப் பணிகளி  நம்மை ஈடுபத்து மட்டுமில்லாது, அதை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நமக்குத் தெரிய வேண்டும்.

எனவே விட்டமின் பி வகை உணவின் மூலம் மூளை  நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், விட்டமின் பி12 உணவுகள் மூலம்  மூளை  நரம்புகளின் காயம் ஏதும் ஏற்படாமல் இருக்கவும்,  மூளை நன்கு வளர்சியடையவும் உதவுகிறது.

இதுபோல்  இன்னும்  நிறைய தேர்ந்தெடுத்த உணவுகளே படிக்கும் மாணவர்களின் இளைஞர்களின் மூளைச் செயல்திறனை அதிகப்படுத்த உதவும்.

ஏனென்றால் மூளைக்கு அதிக ஆற்றல் தேவையாயிருக்கும்போது, நன் மனதையும் உடலையும் திடமாக வைத்திருந்தால் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்துமுடிக்கும் வல்லமையை நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளில் இருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

மேற்கூறிய சாதனையாளர்களைப் போல் நாமும் வாழ உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டால், நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் எல்லாம் வெற்றி பெறமுடியும்.

அதற்கு மூளையும் நமக்குச் சோர்வின்றித் துணையும் உடல் நலமும் ஒத்துழைக்கும், எனவே சுவராகிய சித்திரத்தை  நாம் பத்திரப்படுத்தினால், அதைக்கொண்டு  நமக்குத் தேவையான எல்லாவற்றையும் உருவாக்கிக் கொள்ளக்கூடிய வல்லமையைப் பெற்றவர்களாவோம்!

#சினோஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்