சுவாசம் பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனையா? சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள்!

Mahendran

செவ்வாய், 8 ஜூலை 2025 (18:59 IST)
சுவாச ஒவ்வாமை  மற்றும் ஆஸ்துமா உலக அளவில் 18 முதல் 20 சதவீதம் பேரை பாதிக்கும் ஒரு பொதுவான நோயாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுக்குழாய்கள் வீங்கி, சுற்றியுள்ள தசைகள் சுருங்கி, நுரையீரலுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து, சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
 
"உணவே மருந்து, மருந்தே உணவு" என்ற சித்தர்களின் கூற்றுப்படி, மேற்கண்ட 2 பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் வகைஇயில் சில எளிய சித்த மருந்துகள் மற்றும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
 
கிராம்புக் குடிநீர்: கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு, மஞ்சள், சுக்கு ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து நன்கு காய்ச்சி, வெதுவெதுப்பானதும் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து தினமும் காலை, மாலை இருவேளை குடித்து வரலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து புத்துணர்ச்சி அளிக்கும்.
 
மூலிகைச் சாறுகள்: துளசி, கற்பூரவள்ளி, ஆடாதோடை இலைச் சாற்றைத் தேனில் காய்ச்சி 5 முதல் 10 மி.லி. வரை எடுத்துக்கொள்ளலாம்.
 
நெல்லிக்காய் லேகியம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இருமல் மற்றும் சளி தொல்லைகளை நீக்கவும் நெல்லிக்காய் லேகியத்தைச் சாப்பிடலாம்.
 
துளசி இலைகள்: நுரையீரலை வலுப்படுத்த தினமும் 10 துளசி இலைகளைச் சாப்பிடலாம்.
 
தூதுவளை ரசம்: தூதுவளை இலைகளைப் பயன்படுத்தி ரசம் செய்து உணவோடு சேர்த்து உண்ணலாம்.
 
சிற்றரத்தைப் பொடி: சிற்றரத்தைப் பொடியை தேன் அல்லது பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்ண நுரையீரல் வலுப்படும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்