மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

Mahendran

சனி, 5 ஜூலை 2025 (18:30 IST)
மாதுளையின் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது நாம் அறிந்ததே. ஆனால், அதன் தோலில்கூட அளப்பரிய நன்மைகள் புதைந்துள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆச்சரியமாக இருந்தாலும் உண்மைதான்! மாதுளை தோலில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் கொட்டிக்கிடக்கின்றன. 
 
மாதுளை தோலில் புரதம், பீனாலிக் கலவைகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே மாதுளை தோலை நன்கு வெயிலில் உலர்த்தி, மிக நைஸான பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளலாம். இந்த முறையில் சிரமம் இருந்தால், கடைகளிலேயே விற்கப்படும் மாதுளை தோல் பொடியை வாங்கிப் பயன்படுத்தி கொள்ளலாம்.
 
மாதுளை தோலில் அழற்சி எதிர்ப்பு  மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை சளி, இருமல், தொண்டை வலி போன்ற பொதுவான உபாதைகளை போக்க உதவுகின்றன. தொண்டை வலி இருக்கும்போது, வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியை கலந்து வாய் கொப்பளிக்கலாம். சிலர் தேநீரில் கலந்து பருகுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
 
உடலில் சேரும் தேவையற்ற கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மாதுளை தோலில் அதிகமாக உள்ளன. தினமும் சிறிதளவு மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வருவதன் மூலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு சீராகி, நச்சுக்கள் திறம்பட வெளியேற்றப்படும்.
 
எனவே அடுத்த முறை மாதுளையை உரிக்கும் போது, அதன் தோலை வீணாக தூக்கி எறியாமல், இந்த அனைத்து நன்மைகளையும் நினைவில் கொள்ளுங்கள். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்