மீண்டும் ரூ.54,000 ஆனது தங்கம் விலை.. இதற்கு ஒரு முடிவே இல்லையா?

Siva
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (11:50 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 6,750 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 54,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.545,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,220 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,760 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 87.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 87,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

ALSO READ: வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்: தேனியில் பரபரப்பு..
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்