கர்நாடகாவில் பெண் ஒருவரை கணவன், அவரது நண்பர்கள், போலீஸ் என பலரும் காசுக்காக உல்லாசமாக இருக்க பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள கங்கனாடி பகுதியில் கட்டிய தொழிலாளி ஒருவரும் அவரது 30 வயது மனைவியும் வசித்து வந்துள்ளனர். கட்டிட தொழிலாளியான அந்த கணவன் தனது நண்பர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களோடு உல்லாசமாக இருக்கும்படி தனது மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். கணவனின் தொல்லையால் தனது விருப்பமில்லாமலே அவரது நண்பர்களோடு அந்த பெண் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
ஆனால் நாளுக்கு நாள் கணவன் வேறு வேறு நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களோடு உல்லாசமாக இருக்கும்படி மனைவியை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும் அவர்களோடு அந்த பெண் இருப்பதை கணவனே வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியும் வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இதனை தாங்க முடியாத அந்த பெண் காவூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சந்திரநாயக் என்ற போலீஸிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதை தானே தனிப்பட்ட முறையில் விசாரிப்பதாக கூறி பெண்ணின் வீட்டிற்கு வந்த சந்திரநாயக் முதலில் அவரது கணவரின் செல்போனை பிடுங்கி வீடியோக்களை டெலிட் செய்துள்ளார். ஆனால் அதற்கு பிறகு அவரும் அந்த பெண்ணை வன்கொடுமை செய்துள்ளார். அத்தோடு நில்லாமல் அந்த போலீஸ்காரரும் சில நபர்களை அழைத்து வந்து அவர்களோடு உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கங்கனாடி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பெண்ணின் கணவரையும், காவலரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K