சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள ஆவணங்கள் இல்லாத இந்தியர்களின் பணம் உரிமை கோராத பட்சத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு உரியதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் கணக்கு தொடங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாத கணக்குகளை யாரும் உரிமை கோராத பட்சத்தில் அந்த கணக்கில் உள்ள தொகை சுவிட்சர்லாந்து அரசுக்கு உரியதாகும் என சுவிஸ் வங்கிகள் குழு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பலர் தங்கள் கணக்குகளுக்கான உரிமையை கோரி பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். இதற்கான காலக்கெடு அடுத்த வருடம் வரைதான் என்ற நிலையில் இன்னமும் உரிமை கோராமல் பல கணக்குகள் இருப்பதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு இதுபோல உரிமை கோராமல் இருந்த கணக்குகளில் 10 இந்தியர்களின் வங்கி கணக்குகளும் அடக்கம். பல்வேறு நாட்டில் உள்ளவர்கள் முறையற்ற நீதியில் பணம் ஈட்டி அதை சுவிஸ் வங்கிகளில் பத்திரப்படுத்தி வருகின்றனர். உலக நாடுகள் பல இந்த சட்டவிரோத செயல்பாடுக்கு சுவிட்சர்லாந்து துணை போக கூடாது என்று வேண்டுகோள் விடுத்தன. அதன் பேரில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் மற்ற நாட்டினரின் பட்டியல் கேட்கும் நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியா கூட இந்த பட்டியலை சுவிஸ் வங்கியிடமிருந்து பெற்றிருக்கிறது.