புஸ்வானம் ஆன 2ஜி தீர்ப்பு; ஜெட்டாய் உயர்ந்த சன் நெட்வொர்க் பங்குகள்....

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (14:09 IST)
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுகவின் அ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்துள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
 
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு மீதான தீர்ப்பு இன்று வெளியாகி பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. இந்த தீர்ப்பு குறித்து எச்.ராஜா மற்றும் சுப்பிரமணியன் சுவாமி எதிர்மறையான கருத்தை வெளியிட்டுள்ளனர். 
 
ஆனால், இந்த தீர்ப்பை திமுக, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகின்றனர். குறிப்பாக திமுகவினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சன் ரெட்வொர்க் நிறுவனத்திற்கும் இதனால் லாபம் ஏற்பட்டுள்ளது.  
 
ஆம், இந்த தீர்ப்பின் காரணமாக சன் நெட்வொர்க் பங்குகள் 4.04 சதவீதம் உயர்ந்து, ரூ.977.75 ஒரு பங்கு என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சன் நெட்வொர்க் மட்டும் இல்லாமல் டிபி ரியாலிட்டி, யூனிடெக் நிறுவன பங்குகளும் 20 சதவீதம் வரை உயர்வை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்