இந்த தீர்ப்பை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரசன்னா “தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம். இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே! வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict” எனக் குறிப்பிட்டுள்ளார்.