100 ரூபாயை நிரப்ப 100 கோடி செலவாம்...

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (14:15 IST)
மோடி தலைமயிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.   
 
அதன் பின்னர் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகின. அதன் பின்னர், ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய புது நோட்டுகளையும் ஆர்பிஐ புழக்கத்தில் விட்டது. 
 
இந்நிலையில் இன்று புதிய ரூ.100 நோட்டுக்கான மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புது 100 ரூபாய் லாவண்டர் நிறத்தில் காந்தியின் படத்துடன் வெளியாகவுள்ளது. 
 
இதில் குஜராத்தின் பதானில் உள்ள ராணி கீ வாவ் குளத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த கிணறு யுனெஸ்கோ பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
புதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்தில் விடப்படும் எனவும், அதே சமயம் பழைய ரூ.100 நோட்டுகளும் செல்லும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 
 
ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், புதிய ரூபாய் நோட்டுகள் வழக்கமான 100 ரூபாய் நோட்டுகளை சிறியதாக இருப்பதால் இதனை ஏடிஎம்-ல் நிரப்ப ஏடிஎம் இயந்திரத்தில் சில மாற்றங்களை செய்யவேண்டுமாம். 
 
ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள பணியை செய்ய 100 கோடி ரூபாய் செலவி செய்ய வேண்டியுள்ளதாம். ஒரே சமயத்தில் புதிய மற்றும் புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளையும் ஏடிஎம் இயந்திரத்தில் பயன்படுத்துவது மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்