ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய்: பழைய நோட்டுகள் செல்லுமா?

வியாழன், 19 ஜூலை 2018 (16:19 IST)
மோடி தலைமயிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். 
 
அதன் பின்னர் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகின. அதன் பின்னர், ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய புது நோட்டுகளையும் ஆர்பிஐ புழக்கத்தில் விட்டது.
 
இந்நிலையில் இன்று புதிய ரூ100 நோட்டுக்கான மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புது 100 ரூபாய் லாவண்டர் நிறத்தில் காந்தியின் படத்துடன் வெளியாகவுள்ளது.
 
இதில் குஜராத்தின் பதானில் உள்ள ராணி கீ வாவ் குளத்தின் புகைப்படம்இடம்பெற்றுள்ளது. இந்த கிணறு யுனெஸ்கோ பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
புதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்தில் விடப்படும் எனவும், அதே சமயம் பழைய ரூ.100 நோட்டுகளும் செல்லும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்