பிழப்பு நடத்த கடன் வாங்கும் பிஎஸ்என்எல்; அதுவும் ரூ.5,000 கோடி..

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (20:16 IST)
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுவதும் உள்ள தனது 1.76 லட்சம் ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை. பிஎஸ்என்எல் இது போன்று சம்பளம் தராமல் இருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
 
இந்திய டெலிகாமில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நுழைந்ததில் இருந்தே மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அதிலும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
 
பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதாவது, தொலை தொடர்புத்துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் வந்த பின்னர் கடுமையான நிதி நெருக்கடியாலும், வருவாய் இழப்பாலும் தவித்து வருகிறது.
நிதி நெருக்கடியின் காரணத்தால் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் போடவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 55% வருவாய் ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டுமே செலவிடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 8% கூடிக்கொண்டே போகும். 
 
எனவே, தொடர்ந்து நிறுவனத்தை இயங்குவதற்காக வங்கிகளிடம் ரூ.5,000 கோடி கடன் வாங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலும் கிடைத்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்