ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் வெளியிடவுள்ள ஐபோன் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் ஐபோன் பேட்டரி வடிவத்தை மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 2018-ல் வெளியாகும் ஐபோன்களில் L வடிவிலான பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. முழுமையாக வளையும் தன்மை கொண்ட L வடிவிலான பேட்டரிகளை தனது புதிய ஐபோன் X மாடல்களில் பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் புதிய ஐபோனில் நீண்ட நேர பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஐபோன் X மாடலில் இரண்டு செவ்வக பேட்டரிகளை L வடிவில் வழங்கி இருக்கிறது.
2018 ஐபோன்களில் பயன்படுத்தப்பட இருக்கும் 6.45 இன்ச் ஸ்கிரீன்களை எல்.ஜி. நிறுவனம் விநியோகம் செய்யலாம் என தெரிகிறது. மேலும், எல்ஜி செம் நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் L வடிவிலான பேட்டரிகளை தயாரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கட்டமைக்கப்பட்டிருக்கும் புதிய எல்ஜி தயாரிப்பு ஆலையில் ஐபோன்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.