CH3CH2OH பைக்கை காட்சிப்படுத்திய டிவிஎஸ்

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (17:20 IST)
எத்தனால் எரிபொருளை கொண்டு இயங்கும் Apache RTR 200 FI பைக்கை டிவிஎஸ் நிறுவனம் டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.

 
கடந்த மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, விரைவில் இந்தியாவில் எத்தனால் எரிபொருளை கொண்டு இயங்கும் இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்தார். அதன்படி டிவிஎஸ் நிறுவனம் டெல்லியில் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் Apache RTR 200 FI பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக் எத்தனால் எரிபொருளை கொண்டு இயங்கும் தன்மை கொண்டது. 

 
டிவிஎஸ் நிறுவனம் முந்திக்கொண்டது. அரசு எத்தனால் எரி பொருளை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர நிலையில் விரைவில் அனைத்து நிறுவனங்களும் எத்தனால் அல்லது எத்தனால் மற்றும் பெட்ரோல் எரிபொருள் மூலம் இயங்கும் இன்ஜின் கொண்ட பைக்குகள் தயாரிப்பில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்