இமாலய டார்கெட்... ஒன்னுத்துக்கும் முடியாமல் திணறும் ஏர்டெல்!!

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (13:26 IST)
ரிலையன்ஸ் ஜியோயின் இணைப்புகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 
2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் பலர் ஜியோவிற்கு தாவினர். இதனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன. அதன் பின்பு ஜியோவுக்கு நிகரான திட்டங்களை அமல்படுத்தி, தனது வாடிக்கையாளர்களை ஓரளவு திருப்திப்படுத்தி வருகின்றன.  
 
இந்நிலையில் நஷ்டம் காரணமாக ஏர்டெல், வோடபோன் தனது சேவை கட்டணத்தை உயர்த்தினாலும், அன்லிமிடெட் அழைப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால், ஜியோவோ சேவை கட்டணத்தை உயர்த்தியதோடு, அழைப்புகளுக்கு கட்டணமும் வசூலிக்கிறது. 
இருப்பினும் சமீபத்திய டிராய் அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதாவது, அக்டோபர் மாதத்தில் ஜியோ நிறுவனம் மட்டும் 91 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. பிஎஸ்என்எல் 2.88 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடாபோன் நிறுவனம் 1.90 லட்ச வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் மிகவும் குறைவாக 81,974 வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்று இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்