அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக வந்தது ரிலையன்ஸின் Jio Mart!!

செவ்வாய், 31 டிசம்பர் 2019 (16:17 IST)
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ மார்ட் வெற்றிகரமாக துவங்கப்பட்டுள்ளது. 
 
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு ஜியோ மார்ட் தொடர்பான அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக ஆன்லைன் மூலம் பொருள்களை விற்க ஜியோ மார்ட் எனும் புதிய நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் துவங்கியுள்ளது.
 
முதல்கட்டமாக நவி மும்பை, தானே, கல்யான் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மார்ட் மூலம் சேவை அளிக்கப்படும், பிறகு படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்