ஆம், பிஎஸ்என்எல் வழக்கமாக வழங்கி வந்த ரூ. 1999 சலுகையில் கூடுதலாக 60 நாட்கள் வேலிடிட்டி நியூ இயர் சலுகையாக வழங்கப்பட்டுள்ளது. ஆம், முன்னதாக 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 60 நாட்களு கூடுதலாக வழங்கப்பட்டு 425 நாட்கள் வேலிடிட்டியாக உள்ளது.
மேலும் இந்த சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிஎஸ்என்எல் டியூன்ஸ், பிஎஸ்என்எல் டிவி சந்தா ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகை இன்று டிசம்பர் 25 துவங்கி ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இதனோடு, ரூ. 450 சலுகையில் ரூ. 500 டாக்டைம், ரூ. 250 சலுகையில் ரூ. 275 டாக்டைம் ஜனவரி 2 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. ஜியோவின் சலுகைகளை பொறுத்த வரை அது தனது வாடிக்கையாளர்கள் மற்றும் புதிதாக ஜியோ போன் வாங்குவோருக்காக அறிவித்துள்ளது.
ஆம், புத்தாண்டு சலுகையாக ரூ. 2020 விலையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ள மொத்தமாக 12,000 நிமிடங்கள் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.