இன்னைக்கும் மழையா? ஆட்டம் ரத்தாகுமா? ரசிகர்கள் கவலை

வியாழன், 13 ஜூன் 2019 (13:58 IST)
இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோத இருக்கும் நிலையில் மழையால் போட்டி ரத்து செய்யப்படலாம் என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 17 ஆட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதுவரை 2 போட்டிகளில் விளையாடிய இந்தியா இரண்டிலுமே அபார வெற்றி பெற்றது. இன்று இந்தியாவை எதிர்த்து விளையாட இருக்கும் நியூஸிலாந்தும் இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது லண்டனில் வானிலை சரியாக இல்லை என்பதால், மழையின் காரணமாக இதுவரை 3 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றும் வானம் மேகமூட்டமாகவே இருப்பதால் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மழை பெய்தால் போட்டிகள் ரத்து செய்யப்படும் என்பதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். போட்டி நடைபெறுமா இல்லையா என 3 மணிக்கு மேல் தெரிய வரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்