இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்ட சசி தரூர் “இதுவரை மூன்று ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது மேலும் தொடரும். இதற்கு பதிலாக காலநிலை மாற்றங்கள் சரியாகும் வரை இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளை நடத்தாமல் தடை செய்துவிடலாம். அல்லது இங்கிலாந்து ஏன் மூடப்பட்ட விளையாட்டு அரங்கங்களை உருவாக்கக்கூடாது? இங்கிலாந்தில் வெயில்காலத்தில் கூட மழைதான் பெய்து கொண்டிருக்கிறது” என கிண்டலடிக்கும் தோனியில் பேசியிருக்கிறார்.