மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கியது குறித்து யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன், பெங்களூர் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட அணிகளின் வீரர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித்சர்மாவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக இளம் வீரர் ஹர்த்திக் பாண்டியாவை அணியின் நிர்வாகம் நியமித்தது.
இது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் யுவராங் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது:
ரோஹித் சர்மா 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றவர். அவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது மிகப்பெரிய முடிவாகும். இந்த முடிவெடுக்கும் இடத்தில் நான் இருந்திருந்தால் ஹர்த்திக் பாண்டியாவை துணைக் கேப்டனாக நியமித்துவிட்டு, ரோஹித்தை இன்னும் ஒரு சீசனுக்கு கேப்டனாக விளையாட அனுமதித்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.