ரன் மழை பொழிந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்..! வலுவான நிலையில் இந்திய அணி..!!

Senthil Velan
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (18:28 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.
 
முதல் டெஸ்ட்  போட்டியை இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி சிறப்பாக விளையாடியது. கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டம் இழந்தார்.   
 
அடுத்து வந்த சுப்மன் கில் 34 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களிலும், ரஜத் படிதார் 32 ரன்களிலும், அக்சர் படேல் 27 ரன்களிலும், ஸ்ரீகர் பாரத் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 151 பந்துகளில் 11 பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் என சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 150 ரன்கள் எடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
 
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரண்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர்.

ALSO READ: யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம்..! விஜய் அரசியல் பயணம் குறித்து திருமாவளவன் கருத்து

இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர், ரெஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்