இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள 18 பெரிய தலைவர்கள் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாகவும் இதனால் இந்தியா கூட்டணி தேர்தலுக்குள் பெரும் சிக்கலை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.
லாலு பிரசாத் யாதவ், தேஜாஸ்ரீ யாதவ் ஆகியோர்கள் மீது ஏற்கனவே வழக்கு இருக்கும் நிலையில் அந்த வழக்கு துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோர்கள் மீது உள்ள வழக்கை அமலாக்கத்துறை அதிரடியாக விசாரணை செய்து வருகிறது.
மேலும் தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியவர்களும் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருப்பதாகவும் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் மீது அமலாக்கத்துறை கண்காணிப்பில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது. அதேபோல் சச்சின் பைலட், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டோரும் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களை பயமுறுத்த அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறதா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது