இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்.. அணியில் யார் யார்?

Mahendran
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (10:07 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் சற்று முன் தொடங்கியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய அணி சற்றுமுன் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளனர்.

 இன்றைய போட்டியில் இந்திய அணியில்  ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜித் படிதார், ஸ்ரேயாஸ் அய்யர், ஸ்ரீகர் பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் , பும்ரா, முகேஷ் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இங்கிலாந்து அணியில் இங்கிலாந்து அணியில், பென் ஸ்டோக்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட் ஜானி பேர்ஸ்டோவ், பென் போக்ஸ், ரேஹான் அகமது, டாம் ஹாட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்