இந்திய அணிக்குத் தற்காலிக பயிற்சியாளர் ஆகும் விவிஎஸ் லஷ்மண்!... அப்போ கம்பீர்?

vinoth
வெள்ளி, 21 ஜூன் 2024 (16:51 IST)
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகின்றன. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடந்து வருகின்றன.

இம்மாத இறுதிவரை இந்த தொடர் நடக்கவுள்ள நிலையில் அடுத்து இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளது.

அடுத்தடுத்து சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளில் அவர்கள் விளையாடவுள்ளதால் அவர்களுக்கு ஓய்வளிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு பதில் ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கு விவிஎஸ் லஷ்மண் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடர் முடிந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்துதான் கம்பீர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக தன்னுடைய பணியைத் தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்