இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

vinoth

செவ்வாய், 29 ஜூலை 2025 (07:46 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா, பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக உள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மற்றும் முதுகுவலிப் பிரச்சனைகள் காரணமாக அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியவில்லை. அவரது காயங்களுக்குக் காரணம் அவரின் தனித்துவமான பந்து வீசும்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவர் அடிக்கடிக் காயங்களுக்கு ஆளாகி சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் அவதிப்படுகிறார். இதனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் ‘ஆண்டர்சன் –சச்சின்’ தொடரில் அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது நான்கு போட்டிகளில் விளையாட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் ‘ஆண்டர்சன் –டெண்டுல்கர்’ தொடருக்குப் பிறகு அவர் முழுவதுமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மட்டும் விளையாடுவார் என தகவல்கள் பரவ ஆரம்பித்துள்ளன. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்