இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பேட்ஸ்மேனுமான விராட் கோலி, கடந்த 3 ஆண்டுகளாக ஒரு நாள், டெஸ்ட், டி-20 என எதிலும் சிறப்பாகச் செயல்படவில்லை.
இதனால், இந்திய அணிக்குள்ளும், விமர்சகர்களிடத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் கடும் நெருக்கடியைச் சந்தித்தார். அவர் மீது பலரும் கண்டனம் தெரிவித்து, அவரை அணியில் இருந்து நீக்குபடி கூறினர்..
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் ஆஃப்கானுக்கு எதிராக விளையாடியபோது, தன் 71 சதம் அடித்து( 122/66) அசத்தினார். இப்போட்டியில் இந்திய அணி வென்றது.
இந்த நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு விராட் பதிலடி கொடுத்திருந்தார். இ ந் நிலையில் ஆன்லைன் கருத்துக்கணிப்பில், கிரிக்கெட்டில் அதிகம் விரும்பப்படுகிற விளையாட்டு வீரர்களில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
அடுத்தடுத்த இடங்களில், 2. ஹரீஸ் ரஃப்( பாகிஸ்தான்) , 3, ரிசிட்கான்( ஆஃப்கான்), ஷோகைப் மாலிக் ( பாகிஸ்தான்), 5, ஹசரங்கா( இலங்கை) உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
As per Online Poll by Cricket Fans, Top 5 Sexiest & Most Desirable Asian Cricketers now :