நீங்கள் இந்திய பத்திரிகையாளரா? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கோபம்!

செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (13:00 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இந்திய பத்திரிகையாளருடன் கோபப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
சமீபத்தில் ஆசிய கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த நிலையில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது 
 
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி குறித்து கேள்வி எழுப்பி பத்திரிக்கையாளர் மீது கோபப்பட்டார். மேலும் நீங்கள் இந்திய பத்திரிகையாளரா? என கேள்வி எழுப்பிய ரமேஷ் ராஜா இந்திய பத்திரிகையாளரின் செல்போனை பறித்துக்கொண்டு சம்பவமும் நடந்துள்ளது 
 
மேலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து இருக்குமே என்று சர்ச்சைக்குரிய கருத்தையும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்