ஈ சாலா கப் நம்தேனு உறுதியா சொல்ல முடியாது… கோலி கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

vinoth

புதன், 16 ஏப்ரல் 2025 (07:09 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் இருந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதற்கு அந்த அணி எப்போதுமே பேட்டிங், பவுலிங் என இரண்டு துறைகளிலும் ஒரு சமநிலையைப் பேணாததேக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் இந்த முறை ஐபிஎல் தொடரை மிகச்சிறப்பாக தொடங்கியுள்ளனர். இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் நான்கில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது.

அதனால் இந்த முறை அந்த அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலியிடம் இதுபற்றி கேட்கப்பட்ட போது அவர் அளித்த பதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேள்விக்கு “RCB அணியைப் பொறுத்தவரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்