இரண்டாவது ஒருநாள் போட்டியில் வாட்டர் பாயாக வந்த கோலி… நெகிழ்ந்த ரசிகர்கள்!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (11:06 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி பரிதாபகரமாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி மோசமான பேட்டிங் காரணமாக அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கான 182 ரன்களை எளிதாக சேர்த்தது. அந்த அணியின் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 62 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டிக்கு இடையே இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கோலி, வாட்டர் பாயாக களத்துக்குள் சென்று வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்