உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

vinoth
திங்கள், 20 மே 2024 (14:17 IST)
நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருந்த ஆர் சி பி, அதன் பின்னர் மீண்டெழுந்த ஆர் சி பி அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்று ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் மிகப்பெரிய கம்பேக்காக ஆர்சிபியின் ஆட்டம் பார்க்கப்படுகிறது. இந்த மீட்சிக்கு அந்த அணியின் நட்சத்திர வீரரான கோலியும் ஒரு முக்கியக் காரணம். அவர் இந்த சீசனில் மட்டும் 700 ரன்களுக்கு மேல் சேர்த்து அந்த அணியை அனைத்துப் போட்டிகளிலும் தோளில் தாங்கி வழிநடத்தினார்.

இந்நிலையில் கடைசி போட்டியில் ஆர் சி பி அணிக்கு ஆதரவளிக்க வந்தார் முன்னாள் ஆர் சி பி வீரரான கிறிஸ் கெய்ல். போட்டி முடிந்ததும் ஆர் சி பி ஓய்வறைக்கு சென்ற கெய்ல் வீரர்களை வாழ்த்தினார். அப்போது அவரிடம் பேசிய கோலி “நீங்கள் அடுத்த ஆண்டு ஐபிஎல் க்கு திரும்ப வந்து விளையாடுங்கள். இப்போது இம்பேக்ட் ப்ளேயர் விதி உள்ளது. நீங்கள் ஃபீல்டிங் செய்ய வேண்டாம். இம்பேக்ட் ப்ளேயர் விதி உங்களுக்காகதான் உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்