அப்படி என்னதான் பேசிக்கிட்டாங்க கோலியும் நவீன் உல் ஹக்கும்?… வெளியான தகவல்!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (08:03 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரரான விராட் கோலியும், ஆப்கன் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக்கும் மோதலில் ஈடுபட்டனர். இதன் பிறகு அவரை இந்திய ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அவரும் பதிலுக்கு விராட் கோலியை ட்ரோல் செய்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டியிலும் நவீன் உல் ஹக் பந்துவீசும் போதும் பேட் செய்யும் போதும் கோலி கோலி என ரசிகர்கள் கத்தினர். ஆனால் கத்தவேண்டாம் என கோலி ரசிகர்களை நோக்கி சைகை செய்தார்.

இதையடுத்து  கோலி பேட் செய்த போது நவீன் உல் ஹக் அவரிடம் சென்று கைகொடுத்து சமாதானம் ஆனார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக நடந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது. போட்டி முடிந்த பின்னர் கோலியிடம் என்ன பேசினார் என்பது குறித்து நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

அதில் “கோலியிடம் சென்று கைகொடுத்தேன். அவர் கைகொடுத்து, நமக்குள் நடக்கும் மோதலை இப்போதே முடித்துக் கொள்வோம் எனக் கூறினார். அதற்கு நான் ‘நாம் இருவரும் சேர்ந்தே முடித்துக் கொள்வோம்’ எனக் கூறினேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்