குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து உலகக் கிரிக்கெட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அவரது இந்த இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லுக்குப் பிறகு குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.
இவர் களமிறங்கிய முதல் போட்டியிலேயே 34 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்தபோது கண்களைத் துடைத்துக் கொண்டே சென்றார் அவர். அதையடுத்து அவர் அழுதுகொண்டு வெளியேறுகிறார் என்று ரசிகர்கள் அவரைத் தேற்றும் விதமாகப் பதிவிட்டனர். அது பற்றி பேசியுள்ள வைபவ் “நான் எங்கே அழுதேன். அங்கிருந்த விளக்குகளின் வெளிச்சத்தால் கண்கள் கூசியது. அதனால் கண்களைத் தேய்த்துக் கொண்டே வெளியேறினேன். ஆனால் எல்லோரும் என்னை ஏன் அழுதேன் எனக் கேட்கிறார்கள்?” எனக் கூறியுள்ளார்.