என்ன பாஸ் அடிக்கிறீங்க..? முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை வீழ்த்திய அமெரிக்கா!

Prasanth Karthick
புதன், 22 மே 2024 (09:09 IST)
அமெரிக்கா – வங்கதேசம் இடையே நடந்து வரும் டி20 தொடரில் முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது அமெரிக்கா.



கிரிக்கெட் போட்டிகள் பல ஆண்டுகளாக நடந்து வந்தாலும் பெரும்பாலும் ஆசிய, ஐரோப்பிய நாடுகளே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சமீபமாக அமெரிக்காவும் கிரிக்கெட்டில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஒருங்கிணைப்பில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணி வங்கதேசத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் வங்கதேச அணியை 20 ஓவர்களில் 6 விக்கெட் வீழ்த்தி 153 ரன்களில் சுருட்டிய அமெரிக்கா சேஸிங்கில் 19.3வது ஓவரிலேயே 156 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அமெரிக்காவுக்காக 13 பந்துகளில் 33 ரன்களை குவித்த ஹர்மீத் சிங் ஆட்டநாயகனாக தேர்வானார். உலக கோப்பை தொடரிலும் Team A-ல் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளோடு அமெரிக்க அணியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்