சிக்ஸ் அடிக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்புட்றமாதிரி… தோனியின் சாதனையை முறியடித்த சஞ்சு சேட்டன்!

vinoth

புதன், 8 மே 2024 (10:23 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் கலக்கி வருகிறார். இந்நிலையில் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அவர் தலைமையேற்றிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி தோற்றாலும் சஞ்சு சாம்சன் அபாரமான ஒரு  இன்னிங்ஸை ஆடினர். அவர் 46 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

இந்த இன்னிங்ஸில் அவர் 6 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை அவர் எட்டினார். அதுமட்டுமில்லாமல் குறைந்த போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற தோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். சஞ்சு சாம்சன் 159 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்ட தோனி 169 இன்னிங்ஸ்களிலும், கோலி 180 போட்டிகளிலும் இந்த சாதனையை நிகழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்