உலகக் கோப்பை தகுதி சுற்றில் அதிக கோல்கள்… ரொனால்டோ படைத்த சாதனை!

vinoth

வியாழன், 16 அக்டோபர் 2025 (07:01 IST)
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, உலகளவில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் கோப்பைகளையும் வென்றுவிட்டாலும், இன்னும் ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையை தனது அணிக்காக வெல்லவில்லை. தற்போது 38 வயதாகும் ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் 900 கோல்கள் அடித்து புதிய சாதனையைப் படைத்தார்.

இந்நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார். உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகளில் 40 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவரது சக போட்டியாளரான மெஸ்ஸி 36 கோல்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்