டெல்லி கேப்பிடல்ஸில் இருந்து விலகுகிறாரா கே எல் ராகுல்?... ட்ரேட் செய்ய ஆர்வம் காட்டும் அணி!

vinoth

வியாழன், 16 அக்டோபர் 2025 (06:50 IST)
ஐபிஎல் தொடர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களில் ஒருவர் கே எல் ராகுல். இந்தியா சார்பாக விளையாடும் வீரர்களில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரராக கே எல் ராகுல் உள்ளார். இதுவரை அவர் பெங்களூரு, பஞ்சாப், லக்னோ மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

இதில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்குக் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு டெல்லி அணிக்குக் கேப்டனாகும் பொறுப்பை நிராகரித்தார். இந்நிலையில் இந்த ஆண்டு அவரை டெல்லி அணித் தக்கவைக்கப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மினி ஏலத்தில் அவரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கே கே ஆர் அணி அவரை ட்ரேட் செய்ய விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இரண்டாவது முறையகக் கோப்பை வென்றது. ஆனால் கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் விட்டது. இதையடுத்து அஜிங்க்யே ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த ஆண்டு சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. அதனால் கேப்டன் பொறுப்புக்குக் கே எல் ராகுலை வாங்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்